திருவனந்தபுரம் அருகே கோவளத்தில் கடலுக்கு அடியில் நடந்த திருமணம்

Unknown | 4:59 AM | 0 comments


கேரளாவில் ஒரு திருமணம் தரையில் திட்டமிடப்பட்டு கடலுக்கு அடியில் நடத்தப்பட்டுள்ளது.வாழ்க்கையில் ஒருமுறை நடக்கும் திருமணத்தை வாழ்வில் மறக்க முடியாததாக மாற்ற பலரும் பல வழிகளை கையாளுகின்றனர். வெளிநாடுகளில் கடலுக்குள் மூழ்கி திருமணம் நடத்துவது, பாரசூட்டில் பறந்தவாறு, மலை உச்சியில் கயிற்றில் தொங்கியவாறு என்று பல வழிகளில் திருமணம் செய்கின்றனர்

இந்நிலையில் திருவனந்தபுரம் அருகே கோவளத்தில் நேற்று ஒரு  இளம் ஜோடி கடலுக்குள் மூழ்கி திருமணம் செய்தது. மகராஷ்டிராவை சேர்ந்தவர் நிகில் பவார். இவரும் ஸ்லோவேனியாவை சேர்ந்த யூனிக்கா புரோக்ரானியும் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்ய திட்டமிட்டனர். இவர்கள் நிச்சயதார்த்தம் இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. தங்கள் திருமணத்தை வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற திட்டமிட்ட இவர்கள் கோவளத்தில் கடலுக்கு அடியில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். கோவளம் குரோ பீச்சில் நேற்று இவர்கள் கடலில் மூழ்கி திருமணம் செய்து கொண்டனர். திருமண ஆடைகளுடன் கடலில் மூழ்குவதற்கான உபகரணங்களுடன் இவர்கள் கடலில் மூழ்கி சென்றனர். சில நண்பர்களும் உறவினர்களும் அவர்களுடன் சேர்ந்து கடலில் மூழ்கினர்.

 கடலுக்கு அடியில் சிறப்பாக ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்து இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டனர். கடலுக்கு அடியில் உள்ள வண்ண வண்ண பவள பாறைகளும், கோவளத்தில் மட்டுமே காணப்படும் சில வண்ண மீன்களும் இவர்களது திருமணத்திற்கு சாட்சியாக நின்றன.இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்த, கோவளம் பாண்ட் சபாரி ஸ்கூபா டைவிங் நடத்தி வரும் ஜாக்சன் பீட்டர் கூறியதாவது: அலையில்லாத குளம் போன்ற நீர்நிலைகளில் இதுபோன்ற திருமணங்கள் நடந்திருந்தாலும் இந்தியாவில் அலையடிக்கும் கடலுக்குள் இப்படி ஒரு திருமணம் நடப்பது இது முதல்முறை.

                                                                                                          - நன்றி தினகரன்

Category:


உங்களுடைய படைப்புகள், ஆலோசனைகளை madukkurbayan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்

0 comments