நெகிழ வைத்த பாக்கியாத்!

Unknown | 8:28 AM | 0 comments

நெகிழ வைத்த பாக்கியாத்! 

டிச. 21,22 இரு தின்ங்களும் நடைபெற்ற வேலூர் அல் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் 150வது ஆண்டுவிழாவைக காண 22 ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில்தான் செல்ல முடிந்த்து.


வேலுரில் தெருக்கள் தோறும் தலைப்பாகைகளுடன் உலமாக்களைக்காண உள்ளம் உவகை கொண்ட்து. அண்ணல் அஃலா ஹழரத்தின் மக்பராவில் ஸியாரத் செய்யும்போது நம்மையும் அறியாமல் கண்கள் நீராடுகின்றன.


விழா நடைபெறும் கூனா பிரசிடென்ஸி ஸ்கூல் வளாகத்தில் பிரமிப்பூட்டும் ஏற்பாடுகள். தமிழ், உருது, மலையாள தனி தனி விழா அமர்வுகள்.


தமிழகத்தின் தாய் கல்லூரியான அல்பாக்கியாத்தின் நிறுவனர் அண்ணல் அஃலா ஹழரத் அவர்களைப் பற்றிய உள்ளம் உருகும் நினைவுகளும், பாக்கியாத்தின் மார்க்கச் சேவைகளும் அங்கே மூத்த உலமாக்களால் பகிரப்படும்போது ஒருவிதமான பரவசநிலை.


சுமார் ஒன்றரைக்கோடிக்கும் மேல் செலவு செய்து இவ்விழா நடக்க ஒத்துழைத்த ஜாமிஆவின் நிர்வாகச் செயலாளர் எம். முஹம்மது ஹாஷிம் சாஹிபின் இச்செயலை முறியடிக்கும் விதத்தில் மார்க்கப்பற்றாளச் செல்வர்களைத் தேடிப் பார்க்கிறோம்.


உலமாக்களும்,கல்வியின் மதிப்பு விளங்கிய தனவந்தர்களும் இணைந்தால் இன்ஷா அல்லாஹ் பொலிவிழந்துவரும் தமிழகத்தின் பல அரபிக் கல்லூரிகள் எழுச்சி பெறும் என்பது இந் நிகழ்வின் படிப்பினயாகும்.



ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கூடும் மாநாடுகள் இஜ்திமாக்கள் தமிழகத்தில் நடப்பது வழக்கம் தான். ஆனால் பல்லாயிரக்கணக்கில் உலமாக்கள் ஒன்று கூடியது பாக்கியாத்தின் பேரதியசம் அல்லாவா! அது பாக்கியாத்திற்கு மாத்திரமே உண்டான பரக்கத் அல்லவா!

வாழ்க பாகியாத்தின் தொண்டு! வளர்க ஹாஷிம் குடும்பத்தாரின் சேவை !வெல்க அஃலா ஹழரத் கிப்லாவின் நோக்கம்!











Category:


உங்களுடைய படைப்புகள், ஆலோசனைகளை madukkurbayan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்

0 comments