தஞ்சை: தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கர்நாடகம் தர வலியுறுத்தி மாணவர்கள் தஞ்சையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மேகதாதுவில் கர்நாடகம்  அணை கட்டுவதை எதிர்த்தும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..

நேற்று 18-02-2017 தமிழக சட்ட பேரவைலயில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிரைவேற்றுகையில் எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவையை விட்டு வெளியெற்ற பட்டதையும், தாக்௧ப்பட்டதையும் கண்டீத்து மதுக்கூரில் சாலை மறியல் நடைப்பெற்றது

இன்று (07-02-17) சிரமேல்குடி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சீமை கருவேல மரங்களை அகற்றுவதர்கான விழிப்புணர்வு  ஏற்படுத்தும் விதமாக பேரணியாக சென்றனர்.


கேரளாவில் ஒரு திருமணம் தரையில் திட்டமிடப்பட்டு கடலுக்கு அடியில் நடத்தப்பட்டுள்ளது.வாழ்க்கையில் ஒருமுறை நடக்கும் திருமணத்தை வாழ்வில் மறக்க முடியாததாக மாற்ற பலரும் பல வழிகளை கையாளுகின்றனர். வெளிநாடுகளில் கடலுக்குள் மூழ்கி திருமணம் நடத்துவது, பாரசூட்டில் பறந்தவாறு, மலை உச்சியில் கயிற்றில் தொங்கியவாறு என்று பல வழிகளில் திருமணம் செய்கின்றனர்

இந்நிலையில் திருவனந்தபுரம் அருகே கோவளத்தில் நேற்று ஒரு  இளம் ஜோடி கடலுக்குள் மூழ்கி திருமணம் செய்தது. மகராஷ்டிராவை சேர்ந்தவர் நிகில் பவார். இவரும் ஸ்லோவேனியாவை சேர்ந்த யூனிக்கா புரோக்ரானியும் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்ய திட்டமிட்டனர். இவர்கள் நிச்சயதார்த்தம் இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. தங்கள் திருமணத்தை வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற திட்டமிட்ட இவர்கள் கோவளத்தில் கடலுக்கு அடியில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். கோவளம் குரோ பீச்சில் நேற்று இவர்கள் கடலில் மூழ்கி திருமணம் செய்து கொண்டனர். திருமண ஆடைகளுடன் கடலில் மூழ்குவதற்கான உபகரணங்களுடன் இவர்கள் கடலில் மூழ்கி சென்றனர். சில நண்பர்களும் உறவினர்களும் அவர்களுடன் சேர்ந்து கடலில் மூழ்கினர்.

 கடலுக்கு அடியில் சிறப்பாக ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்து இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டனர். கடலுக்கு அடியில் உள்ள வண்ண வண்ண பவள பாறைகளும், கோவளத்தில் மட்டுமே காணப்படும் சில வண்ண மீன்களும் இவர்களது திருமணத்திற்கு சாட்சியாக நின்றன.இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்த, கோவளம் பாண்ட் சபாரி ஸ்கூபா டைவிங் நடத்தி வரும் ஜாக்சன் பீட்டர் கூறியதாவது: அலையில்லாத குளம் போன்ற நீர்நிலைகளில் இதுபோன்ற திருமணங்கள் நடந்திருந்தாலும் இந்தியாவில் அலையடிக்கும் கடலுக்குள் இப்படி ஒரு திருமணம் நடப்பது இது முதல்முறை.

                                                                                                          - நன்றி தினகரன்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லாஹ் நாளை நமதூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெறவிருக்கும் மீலாதுன் நபி விழா நிகழ்ச்சியின் நேரலையை நம் இணையதளம் www.madukkurbayan.com -ல் காணலாம்.

18.01.2017 அன்று மாலை 5.00 மணி முதல் நடைப்பெற்ற மனித சங்கிலி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.






20.01.2017அன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு நமதூர் பெரியப்பள்ளிவாசலில் இருந்து பேரணியாக முக்கூட்டுச்சாலை வரை சென்றனர், இதில் அதிக அளவிலானஇளைஞர்கள் கலந்துக்கொண்டு மத்திய,மாநில அரசுகளுக்கு எதிராகவும்,PETA அமைப்பை தடை செய்யகோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.






 


மதுக்கூர் இளைஞர் மற்றும் மாணவர் கூட்டமைப்பு சார்பாக ஜல்லிக்கட்டுக்கு அதரவாக மதுக்கூர் வடக்கு பெரமையாக்  கோவில் அருகில் முன்றாவது நாளாக தொடரும் போராட்டங்கள்....














தமிழகம் முழுவதும் இன்று திமுகவினர் ரயில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். பல ஊர்களில் காலையிலேயே ரயிலை மறிக்கத் தொடங்கி விட்டனர் திமுகவினர்.ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்காததைக் கண்டித்தும், தமிழக அரசின் செயலற்ற தன்மையைக் கண்டித்தும் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.


Image result for private school organization leave announcement in tamil nadu

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளி சங்கத்தில் உள்ள பள்ளிகள் நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரலாறு காணாத அளவில் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்திற்கு சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளி சங்கத்தில் உள்ள பள்ளிகள் நாளை இயங்காது என இப் பள்ளிகளுக்கான சங்க தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.


அதேபோல் தனியார் பள்ளிகள் இயங்காது என தமிழக தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் டி.சி. இளங்கோவன் அறிவித்துள்ளார். அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 18 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் பள்ளிகள் விடுமுறை குறித்து அரசு தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

தற்போதுள்ள இந்திய அரசு டிஜிட்டல் மயமாக்கத்தை ஊக்குவிக்கிறது. அதன் ஒரு பகுதியாக விவசாயதிற்கான AgriMarket and Crop Insurance மொபைல் ஆப பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விவசாய பொருட்களுக்கான இன்சூரன்ஸ் மற்றும் இந்தியா முழுவதும் விவசாய பொருட்களுக்கான விலையை அறியலாம்.இந்த மொபைல் ஆப் இந்திய அரசின் விவசாய துறையினால் உருவாக்கப்பட்டுள்ளது  

அரசாங்கம் பல விதங்களில் விவசாயத்திற்காக செலவிடுகிறது. ஆனால் பலரது வேலை குறைபாட்டால் அது விவசாயிகளுக்கு சென்று சேரவில்லை, இதனை போக்கும் விதமாக இந்த மொபைல் ஆப் செயல்ப்படும்.

மேலும் பயிர் கடன், இன்சூரன்ஸ் மற்றும் மானியத்தொகை போன்ற பல விசியங்களை ஆப் மூலம் அறியலாம்