IUML - ஒரு கோடி கையெழுத்து இயக்கம்

Unknown | 6:44 AM | 0 comments




மக்கள் அனைவரும் விரும்பிய மதத்தை பின்பற்றவும், பிரச்சாரம் செய்யவும்,அதன் சட்டத்திட்டங்களின் படி நடந்துகொள்ளவும் அரசியல் சாசனம் வழிவகை செய்திருக்கிறது, ஆனால் அதே அரசியல் சாசனத்தில் 44வது பிரிவை காரணாம் காட்டி பொது சிவில் சட்டம் கொண்டுவர முயற்சிக்கப்படுகிறது.

மத்திய பா.ஜ.க  அரசு நாடாளுமன்ற மக்களவையில் தமக்கு இருக்கும் பலத்தின் காரணமாக பல சட்டங்களை நிறைவேற்றி வருகிறது.எந்த சந்தர்பத்திலும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது சிவில் சட்டத்தை எதிர்த்தும், அரசியல் சாசனத்தின்  44வது பிரிவை ரத்து செய்யக்கோரியும் நாடு முழுவதும் 1 கோடி
கையெழுத்துக்களைப் பெற்று குடியரசு தலைவரிடம் அளிப்பதற்கான  ஒரு கோடி கையெழுத்து இயக்கம் மதுக்கூரில் பெரியப்பள்ளிவாசல் வளாகத்தில் ஹாஜி A.M அப்துல் காதர் (மாவட்ட பொருளாளர்-IUML),N.M அப்துல் அஜீஸ் (நகர தலைவர் -IUML) மற்றும் IUML நிர்வாகிகள் முன்னிலையில்  இன்று நடைபெற்றது.



Category:


உங்களுடைய படைப்புகள், ஆலோசனைகளை madukkurbayan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்

0 comments